போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறிய பொல்லார்ட் - இனி விளையாட மாட்டாரா?
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கீரன் பொல்லார்ட் பாதியிலேயே வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ஷார்ஜாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிக்கோலஸ் பூரன் 40, ராஸ்டன் சேஸ் 39 ரன்கள் எடுத்தனர். இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்ட் 16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் திடீரென ரிட்டையர்டு ஆகி பெவிலியன் திரும்பினார்.
அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவரது வெளியேற்றத்திற்கு காரணம் காயமா, அல்லது மைதானத்தில் நிலவும் வெப்பமா, அல்லது அவருக்கு உடல் நலம் சரியில்லையா என்ற ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் பொல்லார்ட் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Why #Pollard Retd hurt Look very fit why pic.twitter.com/lH46hUGuSf
— Md Majid (@MdMajid8256) October 29, 2021