மீண்டும் அறிமுகமாகும் டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ்? பரவும் தகவல்!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக், அலி எக்ஸ்பிரஸ் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் டிக்டாக்
2020 ஜூன் மாதத்தில், தேசிய பாதுகாப்பு காரணங்களால் மத்திய அரசு டிக்டாக் உட்பட 59 சீன செயலிகளை தடை செய்தது.
அப்போது சீனாவுடனான எல்லை மோதல்களால் இரு நாடுகளின் உறவு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், டிக்டாக் இணையதளம் மீண்டும் அணுகக்கூடியதாக இருப்பதால் மீண்டும் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், டிக்டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் இந்தியா திரும்புவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பரவும் தகவல்
மேலும் செயலி இன்னும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை. இந்தியா - சீனா இடையேயான 24 சுற்று பேச்சுவார்த்தைகள் எல்லை பதற்றங்களை தணித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அலி எக்ஸ்பிரஸ் இணையதளமும் இந்திய பயனர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிக்டாக் போலவே இங்கு பயன்பாடு கிடைக்கவில்லை, மாறாக இணையதளம் மட்டுமே செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.