இனி இங்கேயும் போர்டிங் பாஸ் - விமான நிலையங்கள் போல் மாறும் ரயில்வே!
ரயில்வே புதிய லக்கேஜ் விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது.
ரயில்வே
இந்திய ரயில்வே விமான நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை போலவே, ரயில் பயணிகளின் லக்கேஜ் எடை மற்றும் அளவை கட்டுப்படுத்த கடுமையான ஒழுங்குமுறை திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய விதிகளின்படி, பயணிகள் தங்களது லக்கேஜ்களை மின்னணு எடை இயந்திரங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறும் லக்கேஜ்களுக்கும், அதிக எடையுடன் இல்லாவிட்டாலும் மிகப் பெரியதாக உள்ள லக்கேஜ்களுக்கும் கூடுதல் கட்டணம் அல்லது அபராதம் விதிக்கப்படும்.
AC முதல் வகுப்பிற்கு 70 கிலோ, AC டூ-டயர் பிரிவிற்கு 50 கிலோ, AC த்ரீ-டயர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்கு 40 கிலோ, பொதுப் பிரிவிற்கு 35 கிலோ என ஒவ்வொரு வகுப்பிற்கும் லக்கேஜ் வரம்பு மாறுபடும்.
புதிய லக்கேஜ் விதிமுறை
அனுமதிக்கப்பட்ட எடைக்குள் இருந்தாலும், ரயிலின் உட்புற இடத்திற்கு இடையூறு செய்யும் பெரிய லக்கேஜ்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம். ஆரம்பகட்டத்தில், வட மத்திய ரயில்வே (NCR) மண்டலத்திற்குட்பட்ட பிரயாக்ராஜ் ஜங்ஷன், பிரயாக்ராஜ் சேவோகி,
சுபேதர்கஞ்ச், கான்பூர் சென்ட்ரல், மிர்சாபூர், துண்ட்லா, அலிகர் ஜங்ஷன், கோவிந்த்புரி, எட்டாவா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்படும். டிசம்பர் 2026 முதல், விமான நிலையங்களைப் போலவே,
செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் (போர்டிங் பாஸ் போல செயல்படும்) வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே டெர்மினல் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணம் செய்யாதவர்கள் பிளாட்பார டிக்கெட் (விசிட்டர் பாஸ் போல செயல்படும்) வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Singappenne: ஆனந்திக்காக துணிந்த அன்பு.. விழிபிதுங்கி நிற்கும் கருணாகரன்- சூடுபிடிக்கும் கதைக்களம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
