அது எப்படி காணாம போகும் - பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள் - போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளர்

Priyanka Arul Mohan
By Karthick Feb 04, 2024 08:09 AM GMT
Report

படத்தில் பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகளை காணவில்லை என்பதால் பல கோடி நஷ்டமடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மதன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பிரியங்கா மோகன்

நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான "டாக்டர்" படத்தின் மூலம் பிரபலமடைந்தார் பிரியங்கா மோகன். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் "டான்", சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்", தனுஷுடன் "கேப்டன் மில்லர்" போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளார்.

tiktok-producer-filed-complaint-in-chennai-police

தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், திரைத்துறைக்கு வந்த புதிதில், டிக்டாக் என்ற படத்தில் அதிகமான கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி தோல்விப்படமாக அமைந்தது.

படத்தில், பிரியங்கா மோகன் நடித்த 20 நிமிட காட்சிகள் காணாமல் போனதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மதன் குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

tiktok-producer-filed-complaint-in-chennai-police

அந்த புகாரில், டிக்டாக் படத்தை ரூ.3.50 கோடி செலவில் தயாரித்ததாகவும், தான் தயாரித்த படம் சில பிரச்சனைகளால் தாமதமானதால், நேரத்தில் பிரியங்கா மோகன் பிரபலமடைந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டிஎஸ்.ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் படத்தை வெளியிட்டேன்.

திருமணமான இயக்குநருடன் அப்படியொரு உறவா? பிரியங்கா மோகன் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்!

திருமணமான இயக்குநருடன் அப்படியொரு உறவா? பிரியங்கா மோகன் குறித்து பகீர் கிளப்பிய பிரபலம்!

இந்த படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ந்து போனேன், அதில் பிரியங்கா மோகன் நடித்திருந்த முக்கியமான 20 நிமிட காட்சி வரவே இல்லை. எனக்கு தெரியாமலே அந்த காட்சியை திட்டமிட்டு நீக்கி இருக்கிறார்கள். இதனால், தியேட்டரில் வெளியான டிக்டாக் படம் ஓடவே இல்லை.

அது எப்படி காணாம போகும் - பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள் - போலீசில் புகார் அளித்த தயாரிப்பாளர் | Tiktok Producer Filed Complaint In Chennai Police

இதனால், எனக்கு ரூ.3.50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், டிஎஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்தின் மாஸ்டரிங் என்ஜினியிர் தினேஷ் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் தயாரிப்பாளர் மதன குமார் தெரிவித்துள்ளார்.  

You May Like This Video