21 வயது இன்ஸ்டா பிரபலம் திடீர் மர்ம சாவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Instagram Canada Death
By Sumathi Dec 04, 2022 04:51 AM GMT
Report

21 வயதே ஆன இன்ஸ்டா பிரபலம் மேஹா தாகூர் திடீரென உயிரிழந்துள்ளார்.

டிக்டாக் பிரபலம்  

கனடாவைச் சேர்ந்தவர் மேஹா தாகூர்(21). இந்தியாவை பூர்விகமாக கொண்ட இவர் தனது 2 வயதில் கனடாவில் குடியேறியுள்ளார். கல்லூரியில் சேர்ந்த உடனேயே டிக் டாக்கில் அறிமுகமானார். டிக்டாக்கில் 930,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த தாக்கூர்,

21 வயது இன்ஸ்டா பிரபலம் திடீர் மர்ம சாவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Tiktok Megha Thakur Passes Away At 21 In Canada

அதன் பிறகு மேகா தாக்கூர் இன்ஸ்டாகிராமிலும் பிரபலமானார். 100,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த அவர் உடல் பாசிடிவிட்டியை ஊக்குவிப்பதில் பெயர் பெற்றவர். அவர் நடனமாடும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வந்தார்.

திடீர் மரணம்

இந்நிலையில், மேஹா தாகூர் இறந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது. உயிரிழப்பிற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், மாரடைப்பு அல்லது கார் விபத்தில் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.