Monday, Apr 28, 2025

ஸ்கெட்ச் போட்ட பிரபல இன்ஸ்டா ஜோடி - உல்லாசத்தை நம்பி ஏமாந்த தொழிலதிபர்!

Kerala Instagram Crime
By Sumathi 3 years ago
Report

இன்ஸ்டாகிராம் மூலம் தொழிலதிபரை வலையில் சிக்க வைத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டா பழக்கம்

கேரள மாநிலத்தில் திருச்சூர் அடுத்த கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபதற்கு இன்ஸ்டாகிராம் மூலமாக இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகி வந்த நிலையில் தன் கணவர் துபாயில் இருக்கிறார்.

ஸ்கெட்ச் போட்ட பிரபல இன்ஸ்டா ஜோடி - உல்லாசத்தை நம்பி ஏமாந்த தொழிலதிபர்! | Crime By Group Of People Through Instagram

தனது தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில் கிடக்கிறார். அதனால் நான் மட்டும்தான் தனியாக இருக்கிறேன். வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதை நம்பி அந்தத் தொழில் அதிபர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பாலக்காடு அடுத்த யாக்கறை பகுதியில் இருக்கும் அந்த வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ஏமாந்த தொழிலதிபர்

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டில் இளம் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த தொழில் அதிபர் வீட்டிற்குள் நுழைந்ததும் திடீரென்று ஐந்து நபர்கள் உள்ளே புகுந்து அவரை மிரட்டி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி வீடியோ போட்டோ எடுத்துள்ளனர்.

ஸ்கெட்ச் போட்ட பிரபல இன்ஸ்டா ஜோடி - உல்லாசத்தை நம்பி ஏமாந்த தொழிலதிபர்! | Crime By Group Of People Through Instagram

பின்னர் இவற்றையெல்லாம் வெளியிட்டு விடுவோம் என்று சொல்லி பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அவரின் கழுத்தில் கிடந்த செயின் ,செல்போன், ஏடிஎம் கார்டு, காரில் இருந்த 10,000 பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிக்கிய கும்பல் 

எனது கொடுங்கநல்லூர் பிளாட்டுக்கு வந்தா அங்கிருக்கும் பணத்தை எடுத்து தருவேன் என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து இந்த கும்பல் தொழிலதிபரை கொடுங்கநல்லூருக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் தொழிலதிபர் போகும் வழியில் இருந்து தப்பியோடி இருக்கிறார். தப்பி ஓடியவர் பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் 6 பேரையும் கைது செய்துள்ளன. ஆறு பேரையும் போலீசார் பாலக்காடு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.