ஆசிரியையாக டிக்டாக் அழகி - ஆர்வமெடுத்து கல்லூரிக்கு குவிந்த மாணவர்கள்!
கல்லூரிக்கு மானவர்கள் வராததால், ஆசிரியையாக டிக்டாக் பிரபலம் நியமனம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.
கல்லூரி மானவர்கள்
சீனா, ஹெனான் மாகாணத்தில் கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேரடி வகுப்பு மற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தான் சமீபத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் புதிதாக பேராசிரியர்கள், பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில், ஜாங் என்ற இளம்பெண்ணும் ஒருவர். பட்ட மேற்படிப்பை படித்து முடித்துள்ளார். தற்காலிக பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வெடித்த சர்ச்சை
டிக்டாக்கில் பிரபலமான இவரை 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் கல்லூரியில், வேலைக்கு சேர்ந்ததை அடுத்து மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் பாடம் எடுப்பது, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுவது, போன்ற வீடியோக்கள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனையடுத்து, இதுதொடர்பாக கல்லூரி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛கிங்கின் திறமையின் அடிப்படையிலும், படித்த படிப்பின் அடிப்படையிலும் தான் பணியமர்த்தி உள்ளோம்.
அவர் சிறந்த முறையில் பாடங்களை கற்பிக்கிறார். இது துான் அவருக்கு பணி வழங்கியதற்கான முக்கி காரணம் '' என கூறப்பட்டுள்ளது.