பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் கார் விபத்தில் படுகாயம்

sports car American
By Jon Feb 26, 2021 06:07 AM GMT
Report

பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார். இது குறித்து வெளியான செய்தியில், 'கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரோலிங் ஹில்ஸ் பகுதியில் இன்று காலை 7.12 மணியளவில் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உட்ஸின் கார் பலத்த சேதம் அடைந்துள்ளது.

டைகர் உட்ஸின் இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டைகர் உட்ஸ் கோல்ப் விளையாட்டில் 15 முறை சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றவர். உட்ஸ் கடைசியாக 2019ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டைகர் உட்ஸ் விபத்தில் சிக்கியதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Gallery