சீட் கேட்ட இளம்பெண்.. ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் செய்த கொடூரம்!

Sexual harassment Crime Thanjavur
By Vidhya Senthil Jan 08, 2025 06:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 ஓடும் ரயிலில் இளம்பெண்னை டிக்கெட் பரிசோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவரது கணவர் சென்னையில் வேலை செய்து வருகிறார்.

ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் தனது கணவரைப் பார்க்கத் தனது தாய் மற்றும் பிள்ளைகளுடன் சென்னைக்கு வந்துள்ளார்.பின்னர் கணவரைச் சந்தித்துவிட்டு நேற்று இரவு தாம்பரத்திலிருந்து இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது தாய் மற்றும் பிள்ளைகளுடன் கும்பகோணத்திற்குச் சென்றுள்ளார்.

குடும்பத்தோடு IT ஊழியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்- விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

குடும்பத்தோடு IT ஊழியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்- விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

அப்போது ரயிலில் இளம்பெண் புக் செய்திருந்த டிக்கெட்டின் கீழ் படுக்கை காலியாக இருந்ததால் அதனை தங்களுக்குத் தருமாறு டிக்கெட் பரிசோதகர் தாமஸ் வெல்லஸியிடம் என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரும் கீழ் படுக்கையை ஒதுக்கித் தந்துள்ளார்.

 டிக்கெட் பரிசோதகர் 

இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த நிறுத்தப்பட்டது.

ஓடும் ரயிலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை

பாதிக்கப்பட்ட இளம் பெண் மயிலாடுதுறை ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தாமஸ் வெல்லஸியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.