"thumbs up emoji" அனுப்பியது குற்றமா? ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட் - நீதிமன்றம் ரத்து!

Indian Railways Department of Railways Social Media
By Swetha Mar 14, 2024 07:45 AM GMT
Report

watsapp குழுவில் "thumbs up emoji" அனுப்பிய ரயில்வே அதிகாரியை சஸ்பெண்ட் செய்ததை நீதிமன்றம் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதிகாரி சஸ்பெண்ட்

கடந்த ஆண்டு காவலர் ஒருவரால் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி ஒன்றை ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சவுகான், ‘தம்ஸ் அப்’ எமோஜியை அனுப்பி ரிப்ளை செய்துள்ளார்.

"thumbs up emoji" அனுப்பியது குற்றமா? ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட் - நீதிமன்றம் ரத்து! | Thumbs Up Emoji Is Also Means Ok Says High Court

இதனையடுத்து, அவர் தம்ஸ் அப் பதிவிட்ட செயல் உயர் அதிகாரியின் கொலை செய்தியை கொண்டாடும் விதமாக இருக்கிறது என்று அவர் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பின், விசாரணை நடத்தப்பட்டு சவுகானை பணி நீக்கம் செய்தனர்.

இந்த பணி நீக்கத்தை எதிர்த்து சவுகான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அவரை சேர்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது.

272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர் மரணம் - 70 ஆண்டு கால வாழ்கை போராட்டம்!

272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர் மரணம் - 70 ஆண்டு கால வாழ்கை போராட்டம்!

நீதிமன்றம் ரத்து

இந்த உத்தரவுக்கு எதிராக ரயில்வே ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், தம்ஸ் அப் குறியீடு என்பது ‘ஓகே’ என்பதன் மாற்று குறியீடு ஆகும்.தம்ஸ்அப் குறியீட்டை அதிகாரியின் கொடூர கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது.

"thumbs up emoji" அனுப்பியது குற்றமா? ரயில்வே அதிகாரி சஸ்பெண்ட் - நீதிமன்றம் ரத்து! | Thumbs Up Emoji Is Also Means Ok Says High Court

மேலும் கொலை செய்தியை மனுதாரர் அனுப்பவில்லை. வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை பார்த்து, அந்த தகவலை பார்த்துவிட்டதற்கான அத்தாட்சியாக தம்ப்ஸ்அப் குறியீட்டை பதிவிட்டுள்ளார்.

மனுதாரர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை. மனுதாரரின் விளக்கம் ஏற்புடையதாகவே இருக்கிறது. எனவே, மனுதாரரின் பணி நீக்கத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.