272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் வாழ்ந்த நபர் மரணம் - 70 ஆண்டு கால வாழ்கை போராட்டம்!
இயந்திர நுரையீரலுக்குள் உயிர் வாழ்ந்த நபர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
272 கிலோ இயந்திரம்
அமெரிக்காவை சேர்ந்த பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6 வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், அவரது கழுத்திற்கு கீழ் உள்ள பாகங்கள் முழுவதும் செயல் இழந்தது.
இதனையடுத்து, அவர் சுவாசிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டதால் டெக்சாஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுக்குழாய் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பின் 272 கிலோ எடையுள்ள இயந்திர நுரையீரலின் உதவியால் உயிர் பிழைத்தார்.
வாழ்கை போரட்டம்!
இதன் காரணமாக வாழ்நாள் முழுவதும் அந்த உலோகக் கட்டமைப்பிற்குள் வாழ வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
இப்படியே தனது 70 ஆண்டு காலா வாழ்க்கையை கழித்த அவர் உயிரிழந்தார். பால் அலெக்சாண்டர் அவரது கல்லூரி படிப்பை முடித்து வழக்கறிஞர் ஆனார். பின் தனது கதையை மக்களுக்கு தெரிவித்து ஒரு எழுத்தாளராகவும் மாறினார்.
பாலின் இறப்பு குறித்து பேசிய அவரது சகோதரி பிலிப், "எனது சகோதரரின் நிதி திரட்டலுக்கு நன்கொடை அளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இது அவரது கடைசி சில வருடங்களை மன அழுத்தமின்றி வாழ அனுமதித்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.