சண்டையே வராது..மனைவி மன்னிப்பு கேட்டாங்க..இப்போ வாழ பிடிக்கல - மனம்திறந்த ரஹ்மான்!

Tamil Cinema A R Rahman Divorce Social Media
By Swetha Nov 20, 2024 10:30 AM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவி குறித்து பேட்டியில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரஹ்மான்

இந்தியா சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணம் நடைபெற்றது.

சண்டையே வராது..மனைவி மன்னிப்பு கேட்டாங்க..இப்போ வாழ பிடிக்கல - மனம்திறந்த ரஹ்மான்! | Throwback Video Of Rahman And His Wife Went Viral

இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இது திரைவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ரஹ்மானின் ரசிகர்கள் பலரும் ரஹ்மான் தன் மனைவியுடன் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அவர் பேசிய வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். அதில் பேசி அவர், என் அப்பா அவருடைய 43வது வயதில் இறந்துவிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்; என்ன காரணம்?

ஏ.ஆர்.ரஹ்மான்- சாய்ரா பானு விவாகரத்து.. அதிர்ச்சியில் ரசிகர்கள்; என்ன காரணம்?

சண்டை வராது.. 

அதனால் எனக்கு இப்போது 40 வயதிற்கு பின் வாழ்வதில் விருப்பம் போய்விட்டது. அனைத்து விஷயங்களிலும் ஆசை போய்விட்டது. இருக்கும் சமயத்தில் எதாவது செய்வோம் என்ற தைரியம் வந்த பின் தான் சில வேலைகளில் இறங்கினேன். நான் அப்போது திருமண லயதில் இருந்தேன்.

சண்டையே வராது..மனைவி மன்னிப்பு கேட்டாங்க..இப்போ வாழ பிடிக்கல - மனம்திறந்த ரஹ்மான்! | Throwback Video Of Rahman And His Wife Went Viral

நான் என் மனைவிக்கு நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க. அதுமட்டுமல்லாம என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருந்து அவர்களை வளர்த்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்குள் சண்டையே வராது.

ஒரு விஷயத்தை நாம் திரும்பிப் பார்க்கும் போது நாம் தவறு செய்தது தெரிந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடும்பத்தில் தன்னோட பெருமை பேசக் கூடாது எனக் கூறினார். ஒருவேலை இருவருக்கும் சண்டை நடந்தால் முதலில் சாய்ரா தான் முதலில் மன்னிப்பு கேட்பேன் என கூறினார்.

இவர்கள் இருவரின் இந்த உரையாடலைப் பார்த்த மக்கள் இவர்களைப் போல கணவன் மனைவி இருந்தால் வாழ்க்கை மிகவும் இனிமையானதாக இருக்கும் எனக் கூறி வந்தனர்.

(பொறுப்பு துறப்பு - இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் முற்றிலும் பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. IBC தமிழ் இதனை உறுதிப்படுத்தவில்லை)