தேர்தலில் படுதோல்வி; காங்கிரஸ் தொண்டர்களிடையே பயங்கர மோதல் - viral video!
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் தொண்டர்கள்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை முடிந்தது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி அதிலும், பா.ஜ.க தனிப்பெரும்பான்மைக்கான இடங்களை தொடாமல் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.
இந்தியா கூட்டணி 230 இடங்களை கைபற்றியது.பல்வேறு குழப்பங்களுக்கு அடுத்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மூன்றாம் முறையாக நரேந்திர மோடி பிரதமராக உள்ளார். அதேபோல, கேரள மாநிலம், திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி, 412338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வி.எஸ்.சுனில்குமார், காங்கிரஸ் கட்சியின் கே.முரளிதரன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர்.இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்தே திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் பதற்றம் நிலவி வந்தது.
பயங்கர மோதல்
மேலும் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோஸ் வள்ளூர், முன்னாள் எம்பி- டி.என்.பிரதாபன் ஆகியோரை குற்றம் சாட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அந்த போஸ்டரில், "ஒரு வார்டில் கூட பிரதாபனுக்கு சீட் இல்லை. ஜோஸ் வள்ளூர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பாக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சஜீவன் குட்டியாச்சிராவின் ஆதரவாளரான சுரேஷ் என்பவரிடம் ஜோஸ் வள்ளூர் கேள்வி எழுப்பியபோது இந்த மோதல் பயங்கரமாக வெடித்தது. அதில், வேட்பாளர் முரளிதரனின் ஆதரவாளரான குட்டியாச்சிரா,
சுரேஷ் ஆகியோர் ஜோஸ் வள்ளூர், அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இரு தருப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். கேரளாவில் பாஜக முதல் முறையாக திருச்சூரில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Aren't these the very people who claimed sometime back, of having opened Mohabbat ki Dukan in Bharat?
— BJP KERALAM (@BJP4Keralam) June 8, 2024
The loss of Thrissur to @BJP4India candidate @TheSureshGopi in the Lok Sabha elections seems to have affected them psychologically, with @INCIndia party cadres manhandling each… pic.twitter.com/0MToDlUDBw