3 காதல் தோல்வி; ரஜினி படத்தில் வாய்ப்பு மிஸ்ஸிங் - சிம்ரன் வாழ்க்கை மறுபக்கம்!
நடிகை சிம்ரன் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிம்ரன்
90sகளில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், சூர்யா, என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 2000 ஆண்டுகளில் அதிக வருடங்கள் நாயகி ஆக நடித்தவர் சிம்ரன் தான். அப்பாஸ் உடன் ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது.
அதனையடுத்து, டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துடன் சிம்ரன் நெருக்கமானார். ஆனால், அவரது குடும்பம் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின், கமல்ஹாசன் உடன் பஞ்சதந்திரம் உள்பட ஒரு சில படங்களில் நடித்த போது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் செய்ய போவதாகவும் கூறப்பட்டது.
காதல் தோல்வி
இந்நிலையில், சந்திரமுகி படத்தில் முதலின் சிம்ரன் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று பிரபுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று விலகியதாக சொல்லப்பட்டது. மேலும், அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் விலகியதாகவும் செய்திகள் வெளியானது.
அதன் பின் ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.
3 காதல் தோல்விக்கு பிறகு 2002ல் தன்னுடைய பள்ளி காலத்து தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.