சிறுமியின் வயிற்றில் 3 கிலோ முடி - வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

China
By Sumathi Dec 01, 2022 06:53 AM GMT
Report

14 வயது சிறுமியின் வயிற்றில் 3 கிலோ முடி அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றில் முடி

சீனாவில் சிறுமி ஒருவர் அவரது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி உணவு உண்ன முடியாமல் இருந்துள்ளார். இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்ததில் சிறுமியின் வயிற்றுக்குள் ஏராளமான தலைமுடி இருந்துள்ளது.

சிறுமியின் வயிற்றில் 3 கிலோ முடி - வெளிவந்த திடுக்கிடும் தகவல்! | Three Kilos Of Hair On Girls Stomach China

தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து 3 கிலோ முடியை அகற்றியுள்ளனர். அதனையடுத்து இதுகுறித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில், அந்த சிறுமி தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டிருந்திருக்கிறார்.

பகீர் தகவல்

இதனால் அவரது தலை வழுக்கை ஆகியுள்ளது. தனது தலைமுடியை தானே பிடுங்கி சாப்பிட்டதால் வயிற்றுக்குள் சென்ற தலைமுடி செரிமானம் ஆகாமல் வயிற்றை அடைத்துக் கொண்டு இருந்துள்ளது. இதனால் உணவு உள்ளே செல்ல வழியில்லாமல் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார்.

அதன்படி, அந்த சிறுமிக்கு 'பிகா' என அழைக்கப்படும் விநோத பழக்கம் இருந்துள்ளது. இந்தப் பழக்கம் உள்ளவர்கள் அசாதாரணமான, சாப்பிடக் கூடாத பொருட்களை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள். அப்பா,அம்மா வெளியூரில் வேலை பார்த்து வருவதால் கண்காணிக்க யாரும் இல்லாததால் சிறுமிக்கு இந்த பழக்கம் இருப்பதை கண்டறிய முடியவில்லை என தெரியவந்துள்ளது.