சொட்டைத் தலையில் முடி செழித்து வளர செய்யும் அற்புதக்காய்!

life-style-health
1 வருடம் முன்

வழுக்கை தலை பிரச்சனைக்கு பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குத்தான் வழுக்கை என்று உறுதியாக நம்பிய காலகட்டம் ஒன்று இரு ந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை ஆண்கள் பிள்ளைபருவத்திலிருந்தே பதின்ம வயதிலிருந் தே இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

வழுக்கை பிரச்சனை எங்கு வேண்டுமானாலும் வரலாம். மேலும் இது முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் முடியும். ஆரம்பத்தில் மிளகு அளவில் முடி இருக்கும் புழுவெட்டு போல் ஆரம்பித்து அவை சுற் றியிருக்கும் இடங்களில் பரவி வழுக்கையை உண்டாக்கும். இதை கவனிக்காமல் விட்டால் பிறகு எப் போதும் அந்த இடத்தில் முடி வளராது என்பதால் எப்போதும் உங்கள் தலைமுடியின் மீது ஒருவித கண் வைத்திருங்கள்.

சித்த மருத்துவத்தில் பயன்படும் காய்களில், வழுக்கு குமட்டி காயும் ஒன்று. குமட்டிக் காய்யை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.

குப்பை மாதிரி கிடக்கும் பகுதிகளில், கொடி போல படர்ந்திருக்கும் இது, பார்ப்பதற்கு சிறிய வகை தர்ப்பூசணிப் போல இருக்கும். சுடுகாட்டிலும், ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்திலும் வளர்வதால், மக்களின் பார்வையில் படாமலேயே வழுக்கு குமட்டி காய் வீணாகி வருகிறது.

இந்தக் குமட்டிக் காயினை, கொமட்டிக் காய், ஆற்றுத்தும்மட்டி காய், வரித்தும்பேய்க்குட்டி காய் எனவும் கிராமத்துப் பகுதிகளில் அழைப்பர். 

சொட்டைத் தலையில் முடி செழித்து வளர செய்யும் அற்புதக்காய்! | Life Style Health

புழுவெட்டி என்றால் என்ன?

புழுவெட்டு எனும் நோய் முடி இருக்கும் இடங்களில் வட்ட வட்டமாக முடியை உதிரச்செய்யும் நோயாகும். தலைமுடி, மீசை, தாடி மற்றும் புருவமுடிகளைக் கூட தாக்கும் இயல்புடையது. ஆரம்பத்தில் சிறிய பொட்டு போல உருவாகி, நாணய வடிவாகி,பரவி உடலிலுள்ள அனைத்து முடிகளையும் உதிரச் செய்யும் தன்மையுடயது.

சொட்டைத் தலையில் முடி செழித்து வளர செய்யும் அற்புதக்காய்! | Life Style Health

குமட்டிக்காயை எப்படி பயன்படுத்துவது?

குமட்டிக்காயை அரைத்து, தலையில், முதலில் மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும்.

பின்னர், அதனை கொஞ்சம் நிறைய சேர்த்து, அதனை தலையில், பசை போல அப்பிவிட வேண்டும். அவ்வாறு அப்பிய பின், தொடர்ந்து மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், தலைக்கு நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும் பொழுது, தலை முடி வளர்வதற்கான சுரப்பியானது, தலையில் சுரக்க ஆரம்பிக்கும். பின்னர், படிப்படியாக முடி முளைக்க ஆரம்பிக்கும்.

குமட்டிக்காயின் பயன்கள்

  • குமட்டிக்காயின் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும் கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும்.
  • வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.
  • புழு வெட்டு, பொடுகு ஆகியவற்றால் விழுந்த சொட்டை தலையில், வழுக்கு குமட்டி காயின் சாற்றை தேய்த்தால் மீண்டும் முடி முளைக்கும்.
  • பெண்களின் கருப்பை சார்ந்த கோளாறுகள் மற்றும் நீர்க் கட்டிகள் போன்ற பாதிப்பிற்கு, சிறந்த நிவாரணம் அளிப்பவையாக, இது திகழ்கிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.