ஆம்ஸ்ட்ராங் கதி தான் உனக்கும்.. சென்னையில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் ?
ஆம்ஸ்ட்ராங்கை போலக் கொலை செய்தது போல் உன்னையும் செய்துவிடுவேன் எனத் தான் மிரட்டியதாகக் கூறுவது பொய்யான தகவல் எனத் தொழிலதிபர்மறுப்பு தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர்
சென்னை சிந்தாதரிபேட்டையை சேர்ந்த தொழிலதிபர் அக்தர் உசேனுக்கு என்பவருக்குப் புதுப்பேட்டையைச் சேர்ந்த உபயதுல்லா என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தொழிலதிபர் அக்தர் உசேன் சிந்தாதரிபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
இது குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதரிபேட்டை காவல்துறையினர் உபயதுல்லா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் உபயதுல்லா தெரிவித்திருப்பதாவது : தொழிலதிபர் அக்தர் உசேன் சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய வியாபாரத்திற்கு 20 லட்சத்தைக் கடனாக வாங்கியுள்ளார். 15 லட்சத்தைத் திருப்பித் தந்துள்ளார்.
மீதமுள்ள பணத்தைத் தராமல் இழுத்தடித்துள்ளார். பலமுறை கேட்டும் சரியாகப் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். ஆம்ஸ்ட்ராங்கை போலக் கொலை செய்தது போல் உன்னையும் செய்துவிடுவேன் எனத் தான் மிரட்டியதாகக் கூறுவது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார்.
கொலை மிரட்டல்
தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்பதால் இது போன்ற பொய்யான புகார்களை தன் மீது சுமத்தி காவல்நிலையத்தில் வழக்கு தொடர்வதாக அவர் கண்ணீர்மல்கத் தெரிவித்த அவர் தனது தரப்பில் அனைத்து வித ஆதாரங்களையும் காவல்துறை தரப்பில் ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் மீது சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி ஒரு கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியது. உணவு டெலிவரி நபர்கள் போல் வேடமிட்டு அப்பகுதியில் இருந்த நபர்கள், ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்துக் கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பழிக்குப் பழி கொலை செய்ததாகக் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.