6 ஐகோர்ட் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் - கோரிக்கை என்ன தெரியுமா?

Karnataka India Crime Money
By Vinothini Jul 25, 2023 05:27 AM GMT
Report

ஐகோர்ட் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை மிரட்டல்

கர்நாடக மாநிலம், பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வருபவர் முரளிதர். இவருடைய வாட்ஸ்அப்-க்கு மர்மநபர்கள் ஒரு குறுந்தகவல் அனுப்பி வைத்தனர். அதில், கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதிகளாக பணியாற்றும் 6 பேருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

unknowns-threatening-highcourt-judges

இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அவர்களின் கோரிக்கை, பாகிஸ்தான் நாட்டில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் ஐகோர்ட்டில் நீதிபதிகளாக இருக்கும் முகமது நவாஜ், நரேந்திர பிரசாத், அசோக், நிஜகன்னனவர், சந்தேஷ், நடராஜன் ஆகிய 6 பேரையும் கொலை செய்து விடுவதாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் அந்த பதிவு இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய3 மொழிகளிலும் இருந்தது.

தீவிர விசாரணை

இந்நிலையில், அவர்கள் கேட்ட ரூ.50 லட்சம் கொடுக்கவில்லை என்றால் துபாய் நாட்டை சேர்ந்த கும்பல்கள் மூலமாக நீதிபதிகளை கொலை செய்வோம் என்றும் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்தார்கள். இது பற்றி நீதிபதிகளுக்கு தகவல் தெரிவித்தனர், மேலும், சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

unknowns-threatening-highcourt-judges

இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இந்த மிரட்டல் வந்ததா? அல்லது இங்கிருந்து கொண்டே பாகிஸ்தான் பெயரில் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தார்களா? என்பது தெரியவில்லை.

முன் எச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட 6 நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பையும் போலீசார் வழங்கி உள்ளனர். அவர்களது வீடுகளில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.