பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் ஓரிரு நாட்களில் கைது - கோவை ஆட்சியர்
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பா.ஜ.க. நிர்வாகி மோகனுக்கு சொந்தமான கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும்
குனியமுத்தூர் பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.இதேபோல பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
பதற்றப்பட வேண்டாம்
சாய்பாபா காலனி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது. அதில் பேசிய அவர், கோவை மக்கள் பதற்றப்பட தேவையில்லை.
கோவையில் பதற்றத்தை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமைதியை நிலைநாட்ட இருதரப்பு அமைப்புகளுடன் நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்தினோம். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை.கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் பைக் எண்ணை சிசிடிவியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது எனத் தெரிவித்தார்.