கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு : பாஜகவினரின் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது - அண்ணாமலை

BJP K. Annamalai
By Irumporai Sep 23, 2022 04:03 AM GMT
Report

கோவை , பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

கோவையில் பாஜக குண்டு வீச்சு 

 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது, பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்ட்டுள்ளது.துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவையில்  பெட்ரோல் குண்டு வீச்சு : பாஜகவினரின் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது - அண்ணாமலை | Petrol Bombs Bjp Annamalai

சட்ட ஒழுங்கு சீரழிந்து வருகிறது 

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டர் பதிவில் : கோயம்புத்தூர் பாஜக கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.