தமிழகத்தில் டிரெண்டாகும் சங்குப்பூ டீ... இதில் அப்படியென்ன ஸ்பெஷல்?
இயற்கை மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் சங்கு பூ டீ தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகவும் பிரபலமாகி வருகின்றது.
சங்குப்பூ டீ
இன்றைய காலத்தில் எங்கு பார்த்தாலும் தேநீர் கடைகள் அதிகமாக இருந்து வருகின்றது. தேநீரை மட்டுமே பருகிவிட்டு உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பலரும் உள்ளனர்.
ஏனெனில் தேநீர் அதிகம் பருகுவதால் அமிலத்தன்மை ஏற்பட்டு செரிமான பிரச்சனை ஏற்படுகின்றது. ஆனால் தூத்துக்குடியில் ஒரு தேநீர் கடை மிகவும் பிரபலமாகி வருகின்றது.
ஆம் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சங்குப்பூ டீ ஆரோக்கிய பானமாக இருப்பதுடன், இயற்கை மூலிகைகள் சேர்த்து தயாரிக்கப்படுவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் இந்த டீயை விரும்பி சாப்பிடுகின்றனர்.

உரிமையாளர் கூறியது என்ன?
இதுகுறித்து கடை உரிமையாளர் சபிஷ் கூறுகையில், இந்த தேநீர் கடையை 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருவதாகவும்,தங்கள் கடையில் சங்குப்பூ டீ மிகவும் பிரபலம்.
சங்குப்பூ டீ தயாரிக்க இஞ்சி, பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற மூலிகைகளை பயன்படுத்துவதாகவும், தேன் மற்றும் சர்க்கரை என இரண்டு வகைகளில் கலந்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மூலிகைகள் கலந்த இந்த டீ-க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், 250 கிராம் சங்குப்பூவை ரூ.300க்கு வாங்குகின்றார். இந்த பூவினால் 100 கப் டீ தயாரிக்க முடியும் என்றும் தினமும் 50 முதல் 60 கப் அளவிற்கு விற்பனை ஆவதாக கூறியுள்ளார்.
ஒரு கப் சங்குப்பூ டீ-யின் விலை ரூ.30க்கு விற்பனை செய்வதாகவும், மக்களுக்கும் இவை ஆரோக்கிய பானமாக இருப்பதால் விரும்பி வாங்குவதாகவும் கூறியுள்ளார்..
தீயில் கருகிய முதியோர் இல்லம் - அறைகளுக்குள் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்: தப்பியோடிய ஊழியர்கள்...! IBC Tamil