தூத்துக்குடியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

M K Stalin Thoothukudi
By Vinothini May 13, 2023 09:51 AM GMT
Report

 தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் பகுதியில் உள்ள சிவலார்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்றபோது மகேஸ்வரன், அருண்குமார் ,சுதன் ஆகிய மூன்று சிறுவர்களும் அந்தப் பகுதியிலுள்ள கண்மாய் அருகே விளையாடச் செல்வதாகக் வீட்டில் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

thoothukudi-boys-drowned-in-canal-cm-helped-family

அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிதியுதவி

இந்நிலையில், இந்த செய்தியினைக் கேட்டு தான் மிகுந்த வேதனையடைந்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” நீரில் மூழ்கி 3 உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.