'குட் லக்' - இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்திய பிரபல ஜெர்மன் கால்பந்தாட்ட வீரர்!
இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜெர்மன் கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லர்.
உலகக்கோப்பை
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
9 லீக் போட்டிகளிலும் தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் தோல்வி கண்டு இந்திய அணி வெளியேறியது.
இந்திய அணிக்கு வாழ்த்து
ஆனால் இம்முறை நியூசிலாந்து அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உலகக்கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெர்மன் கால்பந்தாட்ட வீரர் தாமஸ் முல்லருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி பரிசாக வழங்கப்பட்டது. அதில் அவரின் பெயரும், 25 என்ற நம்பரும் குறிக்கப்பட்டுள்ளது.
அந்த ஜெர்ஸியை அணிந்து கொண்ட முல்லர், இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "“ஜெர்ஸி வழங்கிய இந்திய அணிக்கு நன்றி. "குட் லக்” என பதிவிட்டுள்ளார்.
Look at this, @imVkohli ??
— Thomas Müller (@esmuellert_) November 13, 2023
Thank you for the shirt, #TeamIndia! ?
Good luck at the @cricketworldcup #esmuellert #Cricket pic.twitter.com/liBA4nrVmT