இலங்கை வீரர் திசாரா பெரேரா படைத்துள்ள புதிய சாதனை

cricket six perera thisara
By Jon Mar 29, 2021 04:43 PM GMT
Report

இலங்கை வீரரான திசாரா பெரேரா, எந்த வகை கிரிக்கெட் போட்டியிலும் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 வயதான திசாரா பெரேரா, 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது எஸ்.எல்.சி. மேஜர் கிளப் போட்டியில் இலங்கை ராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பாக விளையாடி வருகிறார்.

இதில் புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். இப்போட்டியில் தில்ஹன் கூரே வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார், இதன் மூலம் எந்த வகை கிரிக்கெட் போட்டியிலும் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அத்துடன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.