அப்படி நடந்தால்.. இதுதான் அவருக்கு கடைசி - மேடையில் டிரம்ப் குறித்து பேசிய எலான் மஸ்க்!
டொனால்டு டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார் எலான் மஸ்க்.
மஸ்க்
பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய எலான் மஸ்க், நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெறவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த வெற்றி என்பது மிகவும் முக்கியம் எனக்குறிப்பிட்ட எலான் மஸ்க், அனைவரும் இந்த தேர்தலில் ட்ரம்பிற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகொள்விடுத்தார்.
டிரம்ப்
அனைவரும் வாக்களிப்பதை கட்சித் தொண்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதை செய்யாவிட்டால் இதுவே கடைசி தேர்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதிபர் தேர்தலில்
குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரசார மேடையில் களமிறங்கி உள்ளது, அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.