எல்லாம் முழு கண்ட்ரோல்ல இருந்தும் வீணா போயிடுச்சு…தோல்வி குறித்து ரோகித் சர்மா வேதனை
ஆட்டத்தை முழு கண்ட்ரோல்ல வச்சிருந்தோம், அனால் எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பை அணியை திணறடித்த குஜராத் டைட்டான்ஸ்
நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
மேலும் , 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 56 ரன்கள், டேவிட் மில்லர் 46 ரன்கள், அபினவ் மனோகர் 42 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்களை எடுத்தது குஜராத் டைட்டான்ஸ்.
அதன் பின், 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே அடித்தது. 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ரோகித் சர்மா வேதனை
தொடர்ந்து ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், “இந்த முடிவு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. போட்டி எங்களது கன்ட்ரோலில் இருந்தது.
கடைசி சில ஓவர்களில் நிறைய ரன்களை வாரிக்கொடுத்தது மிகப்பெரிய தவறில் முடிந்துவிட்டது. ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். எங்களது அணிக்கு பேட்டிங் பலமாக இருக்கிறது.
எப்போதும் மைதானத்திற்குள் சென்று எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலக்கை அடைவதற்கு முற்படுவோம். ஆனால் இன்றைய நாள் அதுபோல எங்களுக்கு அமையவில்லை.
15 ஓவர்களுக்குள் எங்களது முக்கியமான பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டோம். குறிப்பாக கடைசி ஏழு ஓவர்களில் மிகப்பெரிய ஹிட் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன்கள் களத்தில் இல்லை. இந்த இடத்தில் தான் தவறு நேர்ந்து விட்டது. தோல்விக்கான காரணமாகவும் பார்க்கிறேன்.” என்று கூறியுள்ளார்.