கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா.ஆப்பு வெச்சது தல தான் : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்

Chennai Super Kings Harbhajan Singh
By Irumporai Apr 24, 2023 05:28 AM GMT
Report

எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த SDhoni யை விட பெட்டரா ஒன்னு இல்லப்பா என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

 டாஸ் வென்ற கொல்கத்தா 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை நேற்று அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது சென்னை அணி.இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் கான்வே, ராகனே, துபே உள்ளிட்ட மூன்று வீரர்கள் அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 235 ரன்கள் குவித்தது.

கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா.ஆப்பு வெச்சது தல தான் : முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் | Harbhajan Singh Csk Ms Dhoni Ipl Match

விக்கெட்டுகள் இழப்பு

அதன் பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியின் பந்துவீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவில் :

இந்த உலகத்துல ஒன்னை விட ஒன்னு பெட்டரா தான் இருக்கும்.ஆனா எப்பிடி ரூம் போட்டு யோசிச்சு பாத்தாலும் இந்த SDhoni யை விட பெட்டரா ஒன்னு இல்லப்பா. கொல்கத்தாவுக்கு காப்பு கட்டுனது தலைவர்னா.ஆப்பு வெச்சது தல தான் எனக் கூறியுள்ளார்.