மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா - முதலமைச்சர் காட்டம்!

M K Stalin Tamil nadu Supreme Court of India
By Sumathi Nov 12, 2022 06:36 AM GMT
Report

மாத வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா என அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

மாதம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா - முதலமைச்சர் காட்டம்! | This Is Not Reservation For The Poor Mkstalin

இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நாமக்கலில் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது.

ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. திமுக அரசின் பொரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான். ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும்.

மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா. முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.