10% இடஒதுக்கீடு: சமூகநீதி போராட்டத்திற்கு பின்னடைவு - முதலமைச்சர் ஆதங்கம்
10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு சமூகநீதி போராட்டத்திற்கான பின்னடைவு என முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
10% இட ஒதுக்கீடு
பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவிவேதி, ஜே.பி பார்திவாலா ஆகிய 3 பேரும் இட ஒதுக்கீடு செல்லும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உறுதி செய்தது.
மு.க.ஸ்டாலின்
அதன் அடிப்படையில், நீதிபதி பேலா திரிவேதி ஆதரவு 10% இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் 50%இடஒதுக்கீடு என்ற வரையறையை மீறவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10%இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், இதுகுறீத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, இன்று வெளியான தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு. மேலும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடரும் என தெரிவித்துள்ளார்.