உங்களின் இறுதி நாள் இதுதான்.. மரணம் நிகழும் தேதியை குறிக்கும் திகில் ஆப்!

United States of America Death World Artificial Intelligence
By Swetha Dec 02, 2024 12:30 PM GMT
Report

மரணம் நிகழும் தேதியை ஏஐ ஆப் ஒன்று துல்லியமாக கணித்து வருகிறது.

 திகில் ஆப்

நாம் வாழும் இந்த வாழ்கை ஒரு நாள் முடிந்து விடும் என்பது அனைவரும் அறிந்தது தான். பிறப்பு என்ற ஒன்று இருந்தால் இறப்பு என்பது இருந்துதான் தீரும். எனவே நிச்சயம் ஒரு நாள் அனைவரும் மரணத்தை சந்திக்க நேரும் ஆனால் அது எப்போது என்று யாராலையும் அறிய முடியாது.

உங்களின் இறுதி நாள் இதுதான்.. மரணம் நிகழும் தேதியை குறிக்கும் திகில் ஆப்! | This Death Clock App Predicts When Will You Die

தற்போது உலகில் வளர்ந்து தொழில்நுட்பம் இது சாத்தியம் என்று சொன்னால் நம்பமுடியுமா? ஆனால் அதுதான் உண்மை. உலகி வெகுவாக வளர்ந்து வரும் இந்த ஏஐ தொழில்நுட்பம் பல பரினாமங்களை அடைந்துள்ளது.

தமிழ் மொழியில் கூகிளின் ஜெமினி AI செயலி - சுந்தர் பிச்சை அறிவிப்பு

தமிழ் மொழியில் கூகிளின் ஜெமினி AI செயலி - சுந்தர் பிச்சை அறிவிப்பு

 இறுதி நாள்

அந்த வகையில், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய மரண கடிகாரம் (Death Clock) என்ற ஆப் ஒரு நபர் எப்போது மரணமடைவார் என்று துல்லியமாக கணித்து கூறுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் இந்த ஆப்பை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

உங்களின் இறுதி நாள் இதுதான்.. மரணம் நிகழும் தேதியை குறிக்கும் திகில் ஆப்! | This Death Clock App Predicts When Will You Die

இந்த ஆப் சுமார் 5.3 கோடி பங்கேற்பாளர்களின் உதவியுடன் 1,200 க்கும் மேற்பட்ட ஆயுட்கால ஆய்வு தரவுகளின் அடிப்படையில் ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப், உணவு, உடற்பயிற்சி, மன அழுத்த நிலைகள் மற்றும் தூக்கம் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி மரணம் நிகழ்வதற்கான சாத்தியமான தேதியைக் கணிக்ககூடுமாம். இந்த நிலையில், அமெரிக்காவில் வாழும் 85 வயது முதியவர் ஒருவர்

அடுத்த ஒரு வருடத்திற்குள் இறப்பதற்கான சாத்தியம் 10% எனும் சராசரியாக இன்னும் 5.6 ஆண்டுகள் அவர் வாழ்வார் என்று இந்த ஆப் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.