தமிழ் மொழியில் கூகிளின் ஜெமினி AI செயலி - சுந்தர் பிச்சை அறிவிப்பு
ஜெமினி AI செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ளார்.
ஜெமினி AI
தமிழ், இந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் உருது உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளுடன் கூகுள் அதன் AI செயலியான ஜெமினி AI செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. பிப்ரவரியில், பார்ட் ஏஐ (Bard AI ) என்ற தனது சாட்பாட்டை ஜெமினி என மறுபெயரிட்டது.
அதன்பின் அதற்கான செயலியை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த செயலி இந்தியாவிலும் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.
சுந்தர் பிச்சை
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இது தொடர்பான அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் "உற்சாகமான செய்தி! இன்று, ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம். இந்த உள்ளூர் மொழிகளை ஜெமினி அட்வான்ஸ்டு மற்றும் பிற புதிய அம்சங்களையும் சேர்த்து, ஆங்கிலத்தில் Google Messages இல் Gemini ஐ அறிமுகப்படுத்துகிறோம்." என தெரிவித்துள்ளார்.
Exciting news! ?? Today, we're launching the Gemini mobile app in India, available in English and 9 Indian languages. We’re also adding these local languages to Gemini Advanced, plus other new features, and launching Gemini in Google Messages in English. https://t.co/mkdSPZN5lE
— Sundar Pichai (@sundarpichai) June 18, 2024
இது 1,500 பக்கங்கள் வரையிலான ஆவணங்கள் பதிவேற்றம் செய்வது முதல் சிக்கலான தரவு பகுப்பாய்வு பணிகள் வரை பலதரப்பட்ட தகவல்களை செயலாக்க மற்றும் புரிந்துகொள்ள 1 மில்லியன் டோக்கன் சூழல் சாளரத்தை வழங்குகிறது.
இதை ஆன்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ios ஸ்டோர்களில், ஜெமினி AI செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜெமினி உங்கள் தனியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், எங்கள் மாடல்களை பயிற்றுவிக்க பயன்படுத்த மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.