ஒருநாள் இரவு தங்குவதற்கு.. வாடகைக்கு எடுக்கப்பட்ட நாடு - எங்கு நடந்தது தெரியுமா?
ஒருநாள் இரவு தங்குவதற்கு ஒரு நாட்டையே வாடகைக்கு எடுத்துள்ளனர். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு நாள் இரவு
இன்றைய காலகட்டத்தில் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ சென்றால் ஒருநாள் இரவு தங்க ஹோட்டலில் ரூம் எடுப்போம். அது மட்டுமில்லாமல் இரு சக்கர வாகனம் முதல் விமானம் வரை நாம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஒரு நாடே ஒரு நாள் இரவுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றால் நம்ம முடிகிறதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சுவிட்சர்லாந்து - ஆஸ்திரியாவிற்கு இடையே லிச்சன்ஸ்டைன் என்ற நாடு உள்ளது.
வாடகை
இங்குக் கடந்த 2011 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் இரவு தங்குவதற்கு முழு நாட்டையுமே வாடகைக்காகப் பதிவு செய்து கொள்ளலாம்.ஏனென்றால் இது சிறிய நாடுதான் . இதில் வெறும் 40 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கும் அளவு கொண்டுள்ளனர்.அந்த நாட்டை ஒரு நாள் இரவுக்கு இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இது பிரபல சுற்றுலா வலைத்தளங்களுள் ஒன்றாக இந்த நாடு உள்ளது.2011 ஆண்டுக்கு பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இந்த சேவையை அந்நாட்டி அரசு நிறுத்தியுள்ளனர்.இந்த வினோதமான நிகழ்வு தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாகப் பரவி வருகிறது.