இது எப்படி சாத்தியம்? Time Travel செய்த பயணிகள் - நடுவானில் நடந்த அதிசயம்!
புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தைப் பொறுத்து வேறுபடும்.
புது வருடம்
உலகம் முழுவதும் 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31 ஆம் தேதி இரவு மக்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.பொதுவாக புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
அதன்படி, புத்தாண்டு முதலில் கிரிடிமதி தீவில் காலை 5 மணிக்கும் (EST)பிறக்கும். இந்திய நேரப்படி டிசம்பர் 31 அன்று பிற்பகல் 3.30 மணி. அதன் பிறகு நியூசிலாந்தின் சதாம் தீவுகள் (Chatham Islands) காலை 5.15 மணிக்குப் பிறக்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணி ஆகும்.
இதனையடுத்து டோங்கா மற்றும் அதனை ஒட்டிய தீவு பகுதிகளில் புது வருடம் பிறக்கும்.அதன் பின்னர் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புது வருடம் பிறக்கும். இந்திய நேரப்படி 4.30 மணி என இருக்கும்.
இதனை தொடர்ந்து சீனா, இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா, அதனை ஒட்டியுள்ள நாடுகளில் புத்தாண்டு பிறக்கும்.இந்திய நேரப்படி 5.30 மணி என இருக்கும்.
அதிசயம்
இந்நிலையில், 2025 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு ஹாங்காங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர் 31ம் தேதி இரவு 8.30-க்கு லாஸ் ஏஞ்சல்ஸில் தரையிறங்கி உள்ளது.
அதாவது, சீனா தலைநகர் ஹாங்காங்கில் முன்னதாகவே புத்தாண்டு பிறந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸின் நேரம் 16 மணி நேரம் பின்தங்கியிருப்பதால் இந்த அரிய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் 5 மணிநேரம் 30 நிமிடங்கள் (UTC +5:30) முன்னதாக நிகழ்ந்துள்ளது.