அவசர உதவி எண்ணிற்கு 17 முறை call செய்த இளைஞர் - விசாரனையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அவசர உதவி எண்ணிற்கு மர்ம நபர் 17 முறை கால் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அவசர உதவி எண்
பொதுமக்களின் அவசர தேவைக்காக அவசர எண்கள் வழங்கப்படும். இந்த எண்ணிற்குக் காரணமே இல்லாமல் அவசர எண்ணுக்கு போன் செய்தால் கைது செய்யப்படுவார்கள். அந்த வகையில் அவசர உதவி எண்ணிற்கு மர்ம நபர் 17 முறை கால் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியின் ஈஸ்ட் வின்ட்ஸரைச் சேர்ந்தவர் 24 வயதான ஆடம் என்ற இளைஞர். இவர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் செல்வதற்கு வாகனத்தை அனுப்பி விடுமாறு கேட்டுள்ளார்.
17 முறை கால்
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் தவறான எண்ணிற்கு அழைத்துள்ளதாகக் கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.ஆனால் தொடர்ந்து விடாமல் 17 முறை கால் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த இளைஞரைக் கைது செய்தனர்.
மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ஆடமிற்கு பார்வைக் குறைவு திறன் இருந்தது தெரியவந்தது. இதனால் அவசர உதவி எண்ணைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.