+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பு வருதா? மோசடி கும்பலின் யுக்தி - வெளியான அதிர்ச்சி தகவல்!

India Permanent Account Number Mobile Phones
By Vidhya Senthil Dec 27, 2024 07:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

சர்வேத எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

சர்வேத எண்

கடந்த அக்டோபர் மாதம் 'சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம்' தொலைத்தொடர்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட சர்வதேச தொலைபேசி அழைப்புகளுள் 90% அதாவது கிட்டத்தட்ட 1.35 கோடி அழைப்புகள் மோசடி அழைப்புகளாக இருந்தது தெரிய வந்தது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தொலைத்தொடர்புத் துறை

இந்த மோசடி அழைப்புகள் குறிப்பாக இந்திய தொலைபேசி குறியீட்டில் (+91) தொடங்கும் எண்களில் ஊடுருவல் செய்து மேற்கொள்ளப்பட்டதை அறிந்த தொலைத்தொடர்புத் துறை அவற்றைத் தடை செய்தது. இதற்கடுத்தபடியாக, மோசடி கும்பல் மற்றொரு யுக்தியை கையில் எடுத்துள்ளது.

QR கோடுடன் PAN கார்டு; இதனால் என்ன பயன், எப்படி டவுன்லோட் செய்வது?

QR கோடுடன் PAN கார்டு; இதனால் என்ன பயன், எப்படி டவுன்லோட் செய்வது?

இவர்கள் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் விடுத்து மோசடி செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இதுபோன்ற மோசடி அழைப்புகள் +8, +85, +65 எனத் துவங்கும் எண்களில் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலே குறிப்பிட்ட எண்களில் அழைப்புகள் வரும்போது விழிப்புணர்வுடன் இருக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எச்சரிக்கை

அதோடு, இந்தியாவின் தொலைபேசிக் குறியீட்டில் (+91) ஆரம்பிக்காத, அறிமுகமில்லாத சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த தொலைத்தொடர்புத் துறை

இதுபோன்ற அழைப்புகள் வரும்போது, அது குறித்து 'சஞ்சார் சாத்தி இணையதளம்' (Sanchar Saathi Website) அல்லது தொலைபேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வரும் பொழுது, அதை சர்வதேசஅழைப்பு எனச் சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.