QR கோடுடன் PAN கார்டு; இதனால் என்ன பயன், எப்படி டவுன்லோட் செய்வது?
QR கோடுகளுடன் கூடிய PAN கார்டுகள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.
PAN கார்டு
வருமான வரித்துறையினர் QR கோடுகளுடன் கூடிய PAN கார்டுகளை வழங்கி வருகின்றனர். உங்களுடைய PAN கார்டு முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தால் QR கோடு உடனான PAN கார்டு பெறுவதற்கான கோரிக்கையை நீங்கள் அனுப்பலாம்.
PAN கார்டு தொடர்பான சேவைகளை வழங்குவதற்காக வருமானவரித்துறையினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள Protean (முன்னதாக NSDL) மற்றும் UTIITSL (UTI Infrastructure Technology and Services Limited) ஆகிய இரண்டு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.
QR கோடு
எனவே, QR கோடு கொண்ட கார்டை பெறுவதற்கான கோரிக்கையை அனுப்புவது தொடர்பான விவரங்களை தற்போதைய PAN கார்டின் பின்புறத்தில் அமைந்திருக்கும் தகவலை வைத்து அறிந்துக்கொள்ளலாம்.
இந்த புதிய PAN கார்டை வரித்துறையினர் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள். PAN 2.0 என்பதன் கீழ் QR கோடு கொண்ட ரீ-பிரிண்டெட் PAN கார்டை 50 ரூபாய் குறைந்தபட்ச தொகையை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.