ஃபீஸ் கட்டாத மாணவன்.. பள்ளி கொடுத்த கொடூரம் தண்டனை - நிர்வாகம் வெறிச்செயல்!
ஃபீஸ் கட்டாத மாணவனுக்கு பள்ளி கொடூர தண்டனை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆர்க்கிட் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வரும் மாணவர் ஒருவருக்கு கொடூர தண்டனை வழங்கியுள்ளது. அதாவது, கல்வி கட்டணம் செலுத்தாததால் அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அவர்களுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்திள்ளது. இதை அறிந்த பெற்றோர் மத்தியில் கடும் கோபம் எழுந்ததுடன், குழந்தைகளின் செயல்பாட்டில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களின் நடத்தை குழந்தைகளை மோசமாக பாதிக்கிறது. இது போன்ற தண்டனைகள் காரணமாக குழந்தைகளின் அறிவு மற்றும் மனநலம் சீர்குலைந்து வருவதாக பெற்றோர்கள் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தண்டனை
இதுபற்றி குழந்தைகள் பெற்றோரிடம் கூறினால் இன்னும் அதிக டார்ச்சர் கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனே இந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும்,
குழந்தைகளை இருட்டறையில் அடைத்து வைத்த இது போன்ற பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து, பிளாக்லிஸ்ட்-இல் சேர்க்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கல்வித்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதுவரை, கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 6 குழந்தைகள் நாள் முழுவதும் இருண்ட நூலகத்தின் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
பள்ளி நிர்வாகம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது மற்றும் ஆதாரமற்றது என்று கூறியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.