ரூ.10,000.. பள்ளி மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ் - விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு குறித்த தகவல்.
திறனாய்வு தேர்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு வரும் ஜூலை 21-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு மாநில பாட திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு முடித்து தற்போது 11-ம் வகுப்பு சேரவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தமிழக அரசின் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட புத்தகத்தில் உள்ள பாட திட்டங்களின்அடிப்படையில் கொள்குறி வகையிலான 2 தாள்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்படும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும்.
விண்ணப்பம்
இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை வரும் ஜூன் 11 முதல் 26 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ. 50 சேர்த்து ஜூன் 26-ம் தேதிக்குள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த தேர்வில் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ரூ.1000 என ஒரு கல்வி ஆண்டில் பத்து மாதங்களுக்கு ரூ.10,000 என்ற கணக்கில் அவர்கள் இளங்கலை படிப்பை முடிக்கும் வரை வழங்கப்பட உள்ளது.