என்னது இது வெறும் நாடகமா? பள்ளி வாயுக்கசிவில் திடீர் டுவிஸ்ட் - வெளியான உண்மை!

Tamil nadu Chennai Tamil Nadu Police School Incident School Children
By Swetha Nov 13, 2024 11:00 AM GMT
Report

பள்ளி வளாகத்தில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக நாடகம் ஆடியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி வாயுக்கசிவு

சென்னை,திருவொற்றியூரில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிதான் விக்டரி மேல்நிலைப் பள்ளி. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. 2 முறை நிகழ்ந்ததால் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

என்னது இது வெறும் நாடகமா? பள்ளி வாயுக்கசிவில் திடீர் டுவிஸ்ட் - வெளியான உண்மை! | Thiruvotriyur School Gas Leakage Hits Sudden Twist

இதன் காரணமாக அந்த பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பள்ளியில் பலமுறை நடத்திய தீவிர சோதனையில், வாயுக்கசிவு ஏற்பட சாத்தியமில்லை என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியிலும் நடத்தப்பட்ட விசாரணை பற்றிய தகவல்கள் போலீசார் கூறி உள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது, அக்டோபர் 25ம் தேதி முதலில் 45 மாணவர்கள் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கண்டித்த ஆசிரியர்; தீர்த்து கட்ட பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள்

கண்டித்த ஆசிரியர்; தீர்த்து கட்ட பள்ளிக்கு கத்தியுடன் வந்த மாணவர்கள்

 திடீர் டுவிஸ்ட்

விக்டரி பள்ளியில் வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 4ம் தேதி மேலும் 10 மாணவர்கள் மயக்கம், வாந்தி வருவதாக கூறவே அவர்களும் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

என்னது இது வெறும் நாடகமா? பள்ளி வாயுக்கசிவில் திடீர் டுவிஸ்ட் - வெளியான உண்மை! | Thiruvotriyur School Gas Leakage Hits Sudden Twist

மாணவர்களின் நிலையைக் கண்டு பெற்றோர் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்திலும் குதித்தனர்.நடந்த சம்பவத்தை அறிந்து, நாங்களும் விசாரணையை துவக்கினோம். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய கள ஆய்வை நடத்தி உள்ளது.

பள்ளியிலும், சரி அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள ஆலைகளில் இருந்து எங்கும் வாயுக்கசிவு ஏற்பட வில்லை என்பது தெரிய வந்தது. எங்களின் சந்தேகம் எல்லாம் மாணவர்கள் மீது திரும்பி இருக்கிறது. பள்ளி பாட வேளைகளை புறக்கணிக்க மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து இதுபோன்று நாடகம் ஆடி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். என்று தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து பிரச்சனைகள் ஓய்வடைந்த நிலையில், விக்டரி பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி உள்ளனர்.