காதல் திருமணம் செய்து தாய் வீடு வந்த தங்கை..அண்ணன் செய்த படுபயங்கர சம்பவம் - பகீர் பின்னணி!
காதல் திருமணம் செய்து கொண்ட தங்கையின் கணவரை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காதல் திருமணம்
திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூர் பகுதியை சேர்ந்த ரோபர்ட் (வயது40). என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சுபலட்சுமியை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து இவர்களது திருமண வாழ்க்கை சந்தோசமாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகக் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ரோபர்ட்டை பிரிந்து சுபலட்சுமி தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் , சுபலட்சுமியின் காதல் திருமணத்தில் அவரது அண்ணன் சிவநேசன் இடையே மோதல், முன்விரோதம் இருந்துள்ளது.
கொலை
இந்த சூழலில் மாயனூரை சேர்ந்த ஒருவரின் இறப்புக்கு ப்ளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவநேசன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிவநேசன் அவரது நண்பர்கள் 6 பேர் ரோபர்ட் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனர். இந்த சம்பவம்,குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ரோபர்ட் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.