ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை..இளைஞர் செய்த கொடூரம் - பகீர் வாக்குமூலம்!
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை செய்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்ப்பிணி பெண்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 4 மாத கர்ப்பிணியான அந்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக சீத்துரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காகக் கோவை- திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் நேற்று நள்ளிரவு பயணம் செய்துள்ளார்.அப்போது அந்த பெண் ரயிலில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.அந்த நேரத்தில் கழிவறைக்கு அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் கர்ப்பிணிப்பெண்ணை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதை எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.அவரது அலறல் சத்தை கேட்டு சக பயணிகள் ஓடி வரும் நேரத்தில் ஓடும் ரயிலில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்ட அந்த இளைஞர் வேறு பெட்டிக்கு மாறி தப்பி ஓடியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பாலியல் தொல்லை
தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த பெண் வாக்குமுலம் அளித்தார். அதில் ரயில் ஜோலார்பேட்டை வந்த உடன் மற்ற பெண்கள் அனைவரும் இறங்கிவிட்டார்கள்.அப்போது ஒருவர் ரயிலில் ஏறினார். சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த நபர் அரைமணி நேரத்திற்கு பின் என்னிடம் அத்துமீற தொடங்கினார். இதனால் எங்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.
நான் கூச்சலிட ஆரம்பித்த உடன் என் முடிய பிடித்து தரதரவென இழுத்து சென்று ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். அதன்பின் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஹேமராஜ் என்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.