திருவண்னாமலை தீபத்திருவிழா: 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
கார்த்திகை
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வரும் மகாதீபத் திருவிழா திருவண்ணாமலையில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றைய தினம் இந்தக் கோயிலில் ஒன்று திரள்வார்கள்.
அதன்படி, கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும்.
இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக டிச.6 மற்றும் 7 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயங்க உள்ளது.