கார்த்திகை தீபம் - இன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டியவற்றை பார்ப்போம்
astrology
By Nandhini
கார்த்திகை தீபத்திருநாளான இன்று முழு ஐஸ்வர்யங்களையும் பெறுவதற்கு கடைபிடிக்க வேண்டியவற்றை பார்க்கலாம் -
தமிழ் மாதங்களில் சிவன், முருகன், விஷ்ணு ஆகிய கடவுள்களுக்கு மிகவும் சிறப்பான மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருடம் நவம்பர் 19ம் தேதியான இன்று கார்த்திகை திருநாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் வீட்டில் அனைவரும் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும்.
வீட்டில் எத்தனை தீபங்கள் ஏற்றினால் அனைத்து பலனையும் பெற முடியும் என்பதைப் பற்றி பார்ப்போம் -
- பூஜை அறையில் 27 தீபங்கள் ஏற்றுவது அனைத்து வித நற்பலன்களையும் கொடுக்கும் அல்லது 9 தீபங்கள் பூஜை அறையில் ஏற்றலாம்.
- வீட்டின் கூடத்தில் (ஹாலில்) 9 தீபங்கள் ஏற்ற வேண்டும். சமையல் அறையில் 7 தீபங்கடிள ஏற்ற வேண்டும்.
- வீட்டின் படுக்கை அறையில் 6 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
- வீட்டு வாசலில் ஐந்து முக குத்து விளக்கு மற்றும் 27 தீபங்கள் ஏற்றுவது மூலமாக சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
- கார்த்திகை தீபத்திருநாள் இன்று வீட்டில் அனைத்து விதமான மின் விளக்குகளையும் ஏற்றி வைத்து, அதனுடன் மேற்கூறியவாறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
- அகல் தீபம் ஏற்றுவதற்கு முன் அகலில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, நல்லெண்ணெய் விட்டு பஞ்ச லோக திரியிட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
- இவ்வாறு வழிபட்டால் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எல்லா விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.