மண்டியிட்டு கதறி.. விபூதி அடித்த ராணுவ வீரர் - வெளியான ஆடியோவால் அம்பலம்
ராணுவ வீரர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
ராணுவ வீரர்
திருவண்ணாமலை, படவேடு கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவர் தனது மனைவியின் கடையை காலி செய்வதில் உள்ள பிரச்னை காரணமாக சிலர் அடித்து அவமானப்படுத்தியதாகவும், அவரை காப்பாற்றுமாறும் வீடியோ வெளியிட்டார்.
தன்னைத் தாக்கியவர்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவும், பின்புலம் இருப்பதாக ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்நிலையில் அந்த ராணுவ வீரர் தன் நண்பருடன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆடியோவால் அம்பலம்
அதில், “நான் எந்த அளவுக்கு எறங்கி வேலை செஞ்சிருக்கேன்னு இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு தெரியவரும். எல்லாம் முடிஞ்சிருச்சு. தமிழ்நாடு முழுக்க பேசப்போவுது. இதான் உண்மை, இதான் நடந்துச்சுனு அங்க ஒன்னுக்கு ரெண்டா சொல்லுங்க. கிட்டத்தட்ட 6 கோடிக்கும் மேல பார்த்திருக்காங்க. நாம் தமிழர், பாஜகனு எல்லாருக்கும் அனுப்பிட்டேன்.
10ல் இருந்து 20 பேரையாவது ரெடியா வச்சிக்கோ. என் தங்கச்சிய அரைநிர்வாணம் செய்து அடிச்சாங்க. நான் அடிக்கக்கூடாதானு கேளுங்க. கத்தியால குத்தினத சொல்லாதீங்க. இது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அவர் கடை கொடுத்தாலும் நமக்கு வேண்டாம். மானம் தான் முக்கியம்.
என்கிட்ட எத்தனை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் பேசினாங்க தெரியுமா. முக்கியமான அரசியல் புள்ளி ஒன்னு பேசிருக்கு. அதை சொல்லக்கூடாது” என பேசியுள்ளார். இதன்மூலம் அவர் வீடியோவில் மனைவியை அரைநிர்வாணமாக்கி அடித்ததாக கூறியது பொய் என தெரியவந்துள்ளது.
இதனால், அவருக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கீர்த்தி, திடீரென தலைமறைவாகி உள்ளார். அவரை போலீஆர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.