மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கினர், ராணுவ வீரர் மண்டியிட்டு கதறல் - வைரலாகும் வீடியோ!

Tiruvannamalai Indian Army
By Vinothini Jun 11, 2023 11:48 AM GMT
Report

 இந்திய ராணுவ வீரரின் மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்குவதாக இவர் கதறும் வீடியோ வைரலாகி வருகிறது.

மனைவி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன், இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலையம் எதிரே உள்ள ஒரு கடையை ராமு என்பவரிடம் இருந்து ஒத்திகைக்கு வாங்கி பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வந்துள்ளார்.

மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கினர், ராணுவ வீரர் மண்டியிட்டு கதறல் - வைரலாகும் வீடியோ! | Army Man Explained The Issue On Attacking His Wife

தற்போது ஒத்திகை காலம் முடிந்தவுடன் கடையை காலி செய்ய கூறி ராமு கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த ராமு கடையில் இருந்த பொருட்களை வீசி அவரை தாக்கியுள்ளார்.

ராணுவ வீரர் கதறல்

இந்நிலையில், திருவண்ணாமலையை சேர்ந்த ராணுவ வீரர், ஜம்மு காஷ்மீரில் இருந்துகொண்டு வீடியோ மூலம் பிரச்சனைகளை கூறி புகார் அளித்து, நடவடிக்கை எடுக்குமாறு மண்டியிட்டு கேட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் கடை வைத்துள்ள எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்கள். அவர் நடத்தி வந்த கடையை காலி செய்யக்கோரி 120 பேர் கும்பலாக வந்து கடையை சேதப்படுத்தியதோடு, மனைவியையும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.,க்கு புகார் அனுப்பியுள்ளேன். உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்" என்று கூறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.