அப்பாவுக்காக ராணுவம் : வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றிய உருக்கமான தகவல்கள்

Indian Army
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

அருணாச்சல பிரதேசத்தின், திராங் பகுதியில் உள்ள போம்டிலா அருகே பறந்து கொண்டிருந்த, இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்ததாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விமானி உயிரிழப்பு

அதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த ஜெயமங்கலத்தை சேர்ந்த மேஜர் ஜெயந்த். துணை விமானியாக இருந்த இவரது உடல் இன்று காலை சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்பாவுக்காக ராணுவம் : வீர மரணமடைந்த ராணுவ அதிகாரி ஜெயந்த் பற்றிய உருக்கமான தகவல்கள் | Major Jayanth Who Died On Arunachal Helicopter

இந்த நிலையில் இவரை பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம்- மல்லிகா தம்பதியரின் மகன் ஜெயந்த்,ஆறுமுகத்திற்கு இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்த ஜெயந்த் மேஜராக பதவி உயர்வு அடைந்துள்ளார்.  

பொதுமக்கள் சோகம்

3 வருடங்களுக்கு முன்பு ஜெயந்த், சாரா ஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. பாட்டியுடன் அன்பாக இருக்கும் ஜெயந்த் தந்தையின் கனவை தனது கனவாக்கி அதில் சாதித்து விட்டார் என்று அவரது குடும்பமும் ஊர் மக்களும் பாராட்டி வந்தனர்.

ஆனால் அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்து அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. மேலும் பல பெரிய பதவிகளுக்கு சென்று சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த இழப்பு மொத்த கிராமத்தையும் கண்ணீரில் மூழ்க செய்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.