Sunday, Jul 6, 2025

திருவள்ளூர் மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி!

Tamil nadu Crime Death
By Sumathi 3 years ago
Report

திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 மாணவி தற்கொலை

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம். விவசாயி. இவரது மனைவி முருகம்மாள். இவர்களது ஒரே மகள் சரளா (வயது17). இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

திருவள்ளூர் மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் இறங்கிய சிபிசிஐடி! | Thiruvallur School Girl Dies By Suicide In Hostel

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிபிசிஐடி  விசாரணை

தகவல் அறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளியில், சிபிசிஐடி அதிகாரிகள், டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட எஸ்.பி கல்யாண் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம் :104,  ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050