திருப்பூரில் பாஜகவின் வேட்பாளர் - அண்ணாமலையின் ரைட் ஹாண்ட் ஏ.பி.முருகானந்தம்..!

Tamil nadu BJP K. Annamalai Election Lok Sabha Election 2024
By Karthick Mar 25, 2024 09:22 PM GMT
Report

கொங்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளை தொடர்ந்து தக்கவைத்து கொண்டு வருகின்றது பாஜக.

பாஜக வேட்பாளர்கள்

திராவிட கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்துள்ள பாஜக, தங்களது கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ், ஏ.சி.எஸ்.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், தேவநாதன் யாதவ் போன்ற கட்சிகளை இணைத்துள்ளது.

thirupur-bjp-candidate-ap-muruganatham

பாஜக கணிசமான வாக்குகளை கொண்ட கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான கோவையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

thirupur-bjp-candidate-ap-muruganatham

அதே போல, தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், ராதிகா சரத்குமார் போன்ற பல நட்சித்திர வேட்பாளர்களை பாஜக களமிறங்கியுள்ளது.

யார் இந்த முருகானந்தம்

இதில், திருப்பூரில் பாஜகவின் சார்பில் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். இந்த தொகுப்பில் யார் இந்த முருகானந்தம் என்பதை காணலாம். பாஜக மாநில பொதுச்செயலாளராக இருக்கும் அவர், 2019ஆம் ஆண்டே தமிழிசைக்கு பிறகு, பாஜக மாநிலத் தலைவருக்கான பரிசீலனையில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

thirupur-bjp-candidate-ap-muruganatham

கட்சியில் பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் ஏ.பி.முருகானந்தம் அண்ணாமலை கட்சியின் தலைவரான நிலையில், அவரின் நெருங்கிய வட்டாரத்தின் ஒருவராக மாறினார்.

thirupur-bjp-candidate-ap-muruganatham

பொறியியல் மற்றும் சட்டத் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள ஏ.பி.முருகானந்தம், முதன் முதலாக 1998 ஆம் ஆண்டில் பாஜகவின் இளைஞரணி மண்டல் தலைவராக பொறுப்பு ஏற்றார்.

ஆர்வத்தை தூண்டும் கோவை - அண்ணாமலை VS சிங்கை ராமசந்திரன் VS கணபதி...! களம் யாருக்கு..?

ஆர்வத்தை தூண்டும் கோவை - அண்ணாமலை VS சிங்கை ராமசந்திரன் VS கணபதி...! களம் யாருக்கு..?


அதனை தொடர்ந்து கடந்த 20 ஆண்டுகளில் மாவட்ட - மாநில பொதுச்செயலாளர், தேசிய செயற்குழு உறுப்பினர், அகில இந்திய இளைஞரணியின் செயலாளர் - துணைத் தலைவர் போன்ற பதவி வகுத்துள்ள அவர் மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

thirupur-bjp-candidate-ap-muruganatham

அதே போல, அண்மையில் முற்றுப்பெற்ற மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையில் பெரும் உறுதுணையாக அவருடனே பயணித்துள்ளார். கட்சிக்காக கடந்த 20 ஆண்டுகளில் பொறுப்புகளில் பணியாற்றியுள்ள ஏ.பி.முருகானந்திற்கு தற்போது எம்.பி பதவி பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.