ஆர்வத்தை தூண்டும் கோவை - அண்ணாமலை VS சிங்கை ராமசந்திரன் VS கணபதி...! களம் யாருக்கு..?

ADMK DMK BJP K. Annamalai Lok Sabha Election 2024
By Karthick Mar 22, 2024 05:02 PM GMT
Report

கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களமிறங்கியுள்ளதே பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

பாஜக அண்ணாமலை

கோவை மக்களவை தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பளராக களமிறக்கட்டுள்ளார். அதே போல திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன் போன்றோர் போட்டியிடுகிறார்கள்.

coimbatore-lok-sabha-battle-dmk-vs-admk-vs-bjp

இவர்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளவர் அண்ணாமலை தான். தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக பாஜக தனி கட்சியாக பெரும் எழுச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலையையே பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

coimbatore-lok-sabha-battle-dmk-vs-admk-vs-bjp

தெருக்களில் இருக்கும் சுவர்களிலும், காரின் முன்னாள் கொடியாக ஒரு கட்சியை கொடியை வைத்து பலரும் வலம் வருகிறார்கள் என்பது ஒரு கட்சியின் ஆதிக்கத்தையே காட்டும் என்று எடுத்து கொண்டால், அண்மைக்காலமாக பாஜக வளர்ந்தே உள்ளது.

பாஜக வேட்பளரான ராதிகா சரத்குமார் - நட்சத்திரங்களை கொண்ட 2-கட்ட வேட்பாளர் பட்டியல்..!

பாஜக வேட்பளரான ராதிகா சரத்குமார் - நட்சத்திரங்களை கொண்ட 2-கட்ட வேட்பாளர் பட்டியல்..!

கோவை என்பது பாஜகவிற்கு செல்வாக்கான ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. தற்போதைய ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த மக்களவை தொகுதியில் இருந்து தான் நாடாளுமன்றம் சென்றார்.

அதிமுக சிங்கை ராமசந்திரன்

அண்ணாமலை இப்படி சாதகங்கள் இருக்கும் நிலையில்,இது எஸ்.பி வேலுமணியின் ஆளுமை விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆளுமை எஸ்.பி.வேலுமணி தான். சிங்கை ஜி.கோவிந்தராஜுவின் மகனான சிங்கை ராமச்சந்திரன் எஸ்.பி.வேலுமணியின் குட் பூக்கில் இருக்கும் நபராகவே கருதப்படுகிறார்.

coimbatore-lok-sabha-battle-dmk-vs-admk-vs-bjp

தொடர்நது பாஜகவை கடுமையாக தாக்கிவரும் எஸ்.பி வேலுமணி தற்போது தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

coimbatore-lok-sabha-battle-dmk-vs-admk-vs-bjp

சிங்கை ராமசந்திரன் குடும்பத்திற்கும் உள்ளூரில் செல்வாக்கு இருக்கிறது என்பதால் அவர் பெரும் போட்டியாளராக வர அதிக வாய்ப்புள்ளது.

திமுக கணபதி ராஜ்குமார்

திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள கணபதி பி.ராஜ்குமார் முன்னாள் கோவை மாவட்ட மேயர் ஆவார். பல பெயர்கள் அடிபட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பினை அளித்துள்ளது திமுக.

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

திமுக 21 தொகுதி வேட்பாளர்கள் - அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!

டாக்டர் மகேந்திரனுக்கு தான் வாய்ப்பு அதிகம் பேசப்பட்ட நிலையில், திமுக இந்த முடிவிற்கு வந்துள்ளது. கொண்டு மண்டலத்தில் அண்மைக்காலமாக திமுகவின் முகமாக மாறிய செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருப்பது திமுகவிற்கு சற்று பின்னடைவே.

coimbatore-lok-sabha-battle-dmk-vs-admk-vs-bjp

ஆனால், அதனை வைத்து திமுக பின்தங்கி விட்டது என்று கூறிவிட முடியாது.ஏனென்றால், மாநிலத்தில் ஆட்சி செய்யும் திமுக தனி கவனம் செலுத்தும் ஒரு தொகுதியாகவே இருக்கிறது கோவை. இப்படி மும்முனை போட்டி உருவாகியிருக்கும் சூழலில், யார் வெற்றி வாய்ப்பினை பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.