'அயோத்தி' போல் திருப்பரங்குன்றம் மாற வேண்டும் - எச்.ராஜா சர்ச்சை பேச்சு!
திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் மதுரையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின் பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி 1 மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நீதிமன்றத்தில் 144 தடை உத்தரவு தொடர்பாக தமிழக அரசு தெரிவித்த போது, திருப்பரங்குன்றம் ஒரு அயோத்தியாக மாறிவிடக் கூடாது என்பதால் தடை விதித்தோம் என தெரிவித்திருக்கிறது.
எச்.ராஜா பேச்சு
திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்; அயோத்தி போல முதல் யுத்தம், முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது. இந்துக்கள் ஒன்றாகாமலிருந்தால் தமிழ் கடவுள் முருகனை தரித்திரனாக்கவிடுவார்கள்.
தமிழகத்தில் இருக்கும் தாலிபான் அரசை முடிவுக்கு கொண்டுவருவோம். அதற்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.